வாழ்த்துரை

கவிஞர் சா.சாதிக்பாட்ஷா

கௌரவத் தலைவர்,குவைத் தமிழோசை கவிஞர் மன்றம்.

மேலாளர், அல் அவ்தா தச்சுப்பட்டறை , குவைத்,

கைப்பேசி:99536903

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

பேரன்புமிக்க தமிழ்கூறும் வாசகர் வட்டத்திற்கு எனது அன்பான முகமன்னையும் வாழ்த்துக்களையும் முதற்கண் மகழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். எனது உற்ற நன்பரும் உடன்பிறவா சகோதரருமாகிய திரு.சே.அருணாசலம் அவர்கள் எழுத்தின் மீது தீரா காதல் கொண்டவர் ஆவார். மேலை நாட்டு பேரறிஞர்களின் பொருள் பொதிந்த படைப்புகளை தானும் படித்து இன்புற்று அதனை யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்னும், திருமூலரின் வைர வரிக்கு ஏற்ப இனிய தமழில் மொழி பெயர்த்து நமக்கு வழங்குவதில் கெட்டிகாரராய் விளங்குகிறார்.

அவர் தம் முதல் படைப்பு ஜேம்ஸ் ஆலன் எழுதிய MAN : KING OF MIND,BODY AND CIRCUMSTANCE என்ற தன்னம்பிக்கை நூலை அழகுத் தமிழில் மனிதன்:மனம், உடல், சூழ்நிலையின் தலைவன் என்று அற்புதமான முறையில் மொழி பெயர்த்துள்ளார். அந்நூலை நான் படித்த போது என் நெஞ்சில் அது ஒரு ஒப்பற்ற தன்னம்பிக்கை ஒளிக் கிற்றை ஒளிரச் செய்தது. இருபத்தைந்து ஆண்டு காலம் வளைகுடா நாடாம் குவைத்தில் , கடும் உழைப்பு,விடாமுயற்சி,மற்றும் தன்னம்பிக்கை இவையே ஒருவர் தம் வாழ்வின் உயர்வுக்கான வீரிய விதைகள் என்பதை உணர்ந்த நான்,அவற்றை மீண்டும் அசைப்போட்டு ஆழமாய் என்னில் நிலைக்கச் செய்ய அந்நூல் உதவியது.

அத்தகைய வளரும் எழுத்தாளராய் விளங்கும் என் அன்பு இளவல் அருணாசலம் அவர்கள் மீண்டும் இங்கிலாந்தை சேர்ந்த சிந்தனையாளர் ஜேம்ஸ் ஆலன் எழுதிய “FOUNDATION STONES TO HAPPINESS AND SUCCESS ” என்ற நூலை மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடித்தளம்என்று இன்பத்தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இதை நான் வாசிக்க நேர்ந்த போது இந்நூல் ஒரு அறிவுப்பெட்டகம் , நுண்ணறிவுக் களஞ்சியம் என்பதனை ஒரு கவிஞனாய் , எழுத்தாளனாய் , என்னால் ஆழமாய் அறியமுடிந்தது. நூலாசரியர் திரு.அருணாசலம் அவர்களின் இரண்டாம் படைப்பு இதுவாகும். குவைத்தில் ஒரு நிறுவனத்தில் இறக்குமதி கொள்முதல் பிரிவில் அயராது உழைக்கும் இவர் கிடைக்கும் சொற்ப நேரத்தில் பகுதி நேர எழுத்து பணியை ஒரு தொண்டாய் ஆற்றி வருவது நிச்சயம் பாராட்டுகுரியதாகும்.

இந்நூல் என்னைப் போன்றே வாசிக்கும் வாசகராகிய உங்கள் அனைவருக்கும் பெரும் பயனைத் தரும் என்னும் உறுதியோடு அணிந்துரையை நிறைவு செய்கிறேன்.நூலாசிரியருக்கு என் இதயபூர்வமான நல்வாழ்த்துகள்.

நன்றி,வணக்கம்

கவிஞர் சா.சாதிக்பாட்ஷா

Feedback/Errata

Comments are closed.